பெண்கள் -ரிலாக்ஸ் ப்ளீஸ்
பொதுவாக. பெண்கள் அழுத்தக்காரர்கள். எளிதில் எதையும் பேசமாட்டார்கள் என்ற ஒரு கருத்து உண்டு........... ஆனால் பட படவென பட்டாசு போல பொறிந்து தள்ளும் பெண்களே அதிகம்.
தன்னிடம் யாராவது சிறிது அன்பாகப்பேசினாலும் போதும்... அவரின் பின்னணி என்ன? நல்லவரா கெட்டவரா? எந்த நோக்கத்தோடு நம்மிடம் பேசுகிறார் என்று எதையுமே யோசிக்காமல் அவர்களை முழுதாய் நம்பி.....வீட்டு சமையலில் ஆரம்பித்து, குடும்பக்கதை, ஃப்ளாஷ்பேக் என்று எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்து விடுவார்கள். அதன் பின் விளைவுகளை சிறிதும் யோசிப்பதில்லை வெகுளித்தனமகவும், வெளிப்படையாகவும் பேசுதல் நல்லதுதான் . அது நம்மை சுடாத வரை.
ஒருவரிடம் பேசும்போது அவரைப்பற்றி சரியாக எதுவும் தெரியாத நிலையில்.......அவர் கேள்விக்குத்தேவையான சரியான பதிலை மட்டுமே சொல்லுதல் போதுமானது. நாம் சொல்லும் விஷயம் அவருக்கு அவசியமா? அதனால் அவருக்கு ஏதாவது நன்மை உண்டா என்று யோசித்து பேசவேண்டும்...... எதார்த்தமாய் பேசுகிறேன் பேர்வழி என்று குப்பைத்தொட்டியில் குப்பை கொட்டுவது போல கண்டதையும் பிறர் காதில் கொட்டி அவர்களை முகம் சுளிக்கச்செய்வது சரி அல்ல. இது நல்ல உறவுகளையும் நம்மிடமிருந்து பிரித்து விலகிச்செல்ல வைக்கும். எனவே அளவோடு பேசி அன்போடு வாழ்வோம்.