வவுனியா பண்டாரிகுளத்தில் பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்!
வவுனியா பண்டாரிகுளம பொலிஸ் காவலரணில் சேவையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தீடீர் மரணமாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
அம்பேபுஸ்ஸவை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நிமல் வீரசூரிய (42 வயது) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
காலரணுக்கு அண்மையில் இவர் குளித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென கீழேவிழுந்து உணர்வற்று காணப்பட்டதாகவும் இவரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.