வவுனியா மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களினை வட்டார ரீதியாக பிரிக்க நிர்ணயக்குழு நியமனம்!
வவுனியா மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களை வட்டார ரீதியாக பிரித்து எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக குழுவொன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை, வெங்கலச்செட்டி குள பிரதேச சபை , ஆகிய ஐந்து உள்ளுராட்சி மன்றங்களை வட்டார ரீதியில் பிரித்து எல்லைகள் நிர்ணயம் செய்யப்படவுள்ளன.
இக்குழுவினை உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா நியமித்துள்ளார்.
'
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்எம்.கே.பந்துல ஹரிச்சந்திர ,உதவி தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி சிங்கள பிரதேச செயலர் எஸ்.ஜானக சிரேஸ்ட நில அளவை உத்தியோகத்தர் பி.சிவதாஸ் ,புள்ளி விபர உத்தியோகத்தர் எம்.தியாகலிங்கம் வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராசா முதலானவர்கள் இக்குழுவில் இடம் பெறுவதோடு இக்குழு எல்லை நிர்ணயம் தொடர்பான எலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.