வவுனியவில் ஒரே நேரத்தில் எட்டு கடைகள் களவு
வவுனியா சந்தைத் தொகுதியில் உள்ள காய் கறி விற்பனை நிலையங்கள் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகர சபைக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வரும் காய் கறி சந்தையிலேயே நேற்று இரவு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
அதன்படி சந்தையில் உள்ள 8 கடைகள் உடைக்கப்பட்டு இன்றைய தினம் மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 61ஆயிரம் ரூபா பணமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.