நிறுத்தல் மற்றும் அளவை உபகரணங்களுக்கு முத்திரையிடாத வர்த்தகர்களுக்கு அபராதம்

நிறுத்தல் மற்றும் அளவை உபகரணங்களுக்கு முத்திரையிடாத 17 பேருக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கைதான 17 பேரும் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்தே, நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைத் திணைக்களத்தின் வவுனியா அலுவலக பொறுப்பதிகாரி பாலஸ்கந்தன் இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த மாத முற்பகுதியில் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போதே நிறுத்தல் அளவை உபகரணங்களுக்கு இதுவரை முத்திரையிடாத வர்த்தக நிலையங்கள் அடையாளங்காணப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் நிறுத்தல் மற்றும் அளவை உபகரணங்களுக்கு இதுவரை முத்திரையிடாத வர்த்தக நிலையங்களை அடையாளம் காண்பதற்கான திடீர் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா அலுவலக பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.