விஸ்வரூபத்திற்கு சிக்கல் தொடர்கிறது : கமலுக்கு எதிராக தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் ஆவேசம்
அட போங்கப்பா, வேற யாரும் பாக்கி இல்லையா.. என்னப்பா இது போங்கா இருக்கு.. ;-)
விஸ்வரூபத்திற்கு சிக்கல் தொடர்கிறது :
கமலுக்கு எதிராக தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் ஆவேசம்
தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் . இவர் இன்று மாலை 7 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனரிடமும், உள்துறை செயலாளரிடமும் ஒரு புகார் மனு கொடுத்திருக்கிறார்.
அதில், விஸ்வரூபம் படத்தில் பிராமணர்களை கமலஹாசன் இழிவுபடுத்திருப்பதால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது குறித்து ராமகிருஷ்ணனிம் நமது நிருபர் பேசியபோது, ‘’விஸ்வரூபம் படத்தை அமெரிக்காவில் பார்த்த என் உறவினர் ஒருவர் அதிர்ச்சியடைந்து, தொடர்புகொண்டார். படத்தின் கதாநாயகி பிராமணப் பெண். அவருக்கு கமல் சிக்கன் சமைத்துக் கொடுப்பதுபோல் காட்சி வருகிறது.
இது எங்களின் உணர்வை புண்படுத்துகிறது. கமல் முற்போக்கு வாதி, அறிவுஜிவி என்றூ சொல்லிக்கொண்டு மடத்தனமான வேலைகளில்தான் ஈடுபடுவார். அவரை நாங்கள் ஒருபோதும் பிராமணராக அங்கீகரித்தது கிடையாது.
பூணூல் என்பது சொறிந்துகொள்வதற்கு வசதியாக இருக்கிறது என்று ஒருமுறை கமல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் எப்படி பிராமணராக இருக்க முடியும்.
விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க அங்கே இங்கே சென்று முட்டுவதைவிட ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள ஆஞ்சேனர் கோவிலுக்கு வந்துதேங்காய் உடைத்தி ருந்தால் விஸ்வரூபத்தின் தடைகள் உடைபட்டு போயிருக்கும்’’ என்று ஆவேசமாக கூறினார்.