வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி
இன்று பிற்பகல் 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இவ்விபத்தில் மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் பணியாற்றி வந்த பி.செல்வராசா (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரில் இருந்து கண்டி வீதி வழியாக துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்த போது, அநுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேருந்து குறித்த நபருடன் மோதியுள்ளது.
படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதிலும் சிகிச்கைக்கு பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த நபர் நாளைய தினம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக பொருட்கள் வாங்கி வந்துள்ள நிலையிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக வவுனியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.