இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழ் வைத்தியர் தொடர்ந்தும் தடுப்பில்.


இலங்கை இராணுவத்தினரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட வைத்திய நிபுணரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தாமல் மாங்குளம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை என்று கூறி அவரை தடுத்து வைத்துள்ளனர்.
கடந்த 29ம் திகதி இராணுவத்திலிருந்து விலக விரும்பும் தமிழ் யுவதியுடன் கொக்காவில் முகாமிற்குச் சென்ற குறித்த வைத்தியர் அங்கு வைத்து பொய்க் குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
பின்னர் மாங்குளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட இவர் கடந்த 4 நாட்களாக தொடர்ந்தும் பொலிஸாரின் தீவிர விசாரணைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கின்றார்.
இந்நிலையில் இன்றைய தினம் அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார் என கூறப்பட்ட போதும் இன்று அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
இது தொடர்பாக வைத்தியரின் உறவினர்கள் கேட்டபோது வாகனம் இல்லை, விசாரணைகள் முடியவில்லை என பல காரணங்களை பொலிஸார் கூறியிருக்கின்றனர்.
எனினும் குறித்த வைத்தியரை வவுனியாவில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரின் விசாரணைக்குட்படுத்தப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனாலும் இதனை வைத்தியரின் உறவினர்களோ, வைத்தியர்களோ உறுதிப்படுத்தவில்லை,
மேலும் குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக இதுவரை யாழில் எந்த விதமான எதிர்ப்பு போராட்டங்களும் நடைபெறவில்லை.
இதற்கு பயங்கரவாத தடுப்பு பொலிஸாரின் அச்சுறுத்தலும், அழுத்தமுமே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.