சுனாமி நினைவுதினம் வவுனியாவில்
இயற்கையில் சுனாமியின் தாக்கத்தை என்றும் மறக்க முடியாதவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.
நகரசபையின் ஏற்பாட்டில் இன்று சுனாமியால் உயிர்நீர்த்த மக்களின் 8வது வருட நினைவுதினம் பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
தமிழர் தாயகப் பகுதியில் கடற்கோளின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பலர் அங்கவீனராகினர்.
இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான தேசமான்ய சு.குமாரசாமி, பொ.செல்லத்துரை, நகரசபை செயலாளர் வே.வசந்தகுமார் உட்பட பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.