உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த தாய்!
இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து நாடு திரும்பிய பெண்ணொருவர் தனது உயிரிழந்த இரண்டு மாத குழந்தையுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்களில் 21 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இந்த நாடு திரும்பிய குழுவினருடனே குறித்த பெண் தனது குழந்தையின் சடலத்தையும் கொண்டு வந்துள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணுக்கு தமிழக அகதி முகாமில் குழந்தை பிறந்துள்ளது. பிரசவிக்கப்பட்ட குழந்தை சுகவீனமுற்ற நிலையில் இருந்துள்ளது.
இந்நிலையில், குறித்த பெண் நாடு திரும்பியபோது, குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், விமான நிலைய அதிகாரிகள் குறித்த பெண்ணை குழந்தையின் சடலத்துடன் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.