வட மாகாணத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு


நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழையினால் வட மாகாணத்தில் 9515 குடும்பங்களை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் தவிர்ந்த வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 9515 குடும்பங்களைச் சேர்ந்த 30, 714 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இதில் வுனியாவில் 4550 குடும்பங்களை சேர்ந்த 15, 891 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2680 குடும்பங்களை சேர்ந்த 7274 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 706 குடும்பங்களை சேர்ந்த 2525 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1579 குடும்பங்களை சேர்ந்த 5024 பேரும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையங்கள் தெரிவத்துள்ளன.
இதேவேளை வவுனியாவில் 42 முகாம்களும் மன்னாரில் 12 முகாம்களும் கிளிநொச்சியில் 6 முகாம்களும் திறக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.