இலங்கையில் தொடரும் மர்மக் கொலைகள்
இலங்கையின் சில பிரதேசங்களில் மர்மமான முறையில் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிகிறது.
வவுனியா, பாணந்துறை, கண்டி மற்றும் மஹாவ ஆகிய பிரதேசங்களில் மர்மமான மரணங்கள் பதிவாகியுள்ளன.
வவுனியா அச்சுபுரம் பிரதேசத்தில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
47 வயதான முருகேசு மஹிபாரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, பாணந்துறை கொடெல்லவத்த பிரதேசத்தில் 52 வயதான நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ரணவன ஆராச்சிய சரத்சந்திர ரனவன என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரைக் காணவில்லை என அவரது நண்பர் ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, சரத்சந்திரவின் சடலம் அவரது வீட்டிலிருந்து மீட்க்கப்பட்டுளளது.
இதேவேளை, கண்டி வை.எம்.பி.ஏ விடுதியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
51 வயதான பால்கே சந்திரசேன என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மஹவ உடுகம பிரதேசத்தில் இளம் தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
21 வயதான கிஹான் மதுசங்க மற்றும் 18 வயதான மதுஷிகா குமாரி என்ற யுவதி இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இருவரும் கணவன் மனைவி எனத் தெரிவிக்கப்படுகிறது.