அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளின் எண்ணிக்கை குறைவு: சட்டவிரோதமாக ஆஸி. செல்ல முனைந்த 16 பேர் கைது
இலங்கையில் இருந்து அகதிகளாக அவுஸ்திரேலியா செல்வோரின் படகுகள் அதிகரித்துள்ள போதும், அந்த படகுகளில் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 10ம் திகதி முதல் இதுவரையில் 6 இலங்கை அகதிப் படகுகள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளன.
எனினும் அந்த படகுகளில் 12 பேருக்கும் குறைவான அகதிகளே பயணித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல விருந்த 16 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முனைந்த 16 குடியேறிகள் அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகு பயணத்தை ஆரம்பிக்க திட்டமிட்ட நிலையில், விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று அம்பாந்தோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.