வவுனியாவில் அரச சேவையாளர்களின் அசமந்தம்

வவுனியாவில் அரச சேவையாளர்களில் பெருமளவானவர்கள் தங்கள் அரச கடமைகளை சரியாக செய்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.அரசவேசையாளர்கள் தொடர்பில் பொதுமக்கள் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.தங்கள் கடமைக்கே காலம் தாழ்த்தி வரும் இவர்கள் வந்தும் தொலைபேசி உரையாடல்களையும் வேறு விடயங்கள் தொடர்பிலுமே (தேநீர் அருந்தல், இணையத்தில் அரட்டை காதல் விடயங்கள்) கவனம் செலுத்துகின்றனர்.தேவை கருதி பொதுமக்கள் கால் வலிக்க வரிசையில் காத்திருந்தாலும் அவர்களின் கும்மாளம் தொடர்கிறது. என்பதுடன் பயன் கருதி வருபவர்களை கடும் வார்த்தைகளால் திட்டுவதும் ஏசுவதுமாக இருக்கின்றார்கள்.அத்துடன் பயனாளிகள் கேட்கும் விடயங்களுக்கும் அசமந்தமாக பதிலளிக்கின்றனர். அத்துடன் பணம் பெற்றுக்கொண்டு உயரதிகாரிகள் வேலை வழங்குதல், பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு வவுனியாவில் அரச சேவையில் உள்ள அதிகாரிகள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
By:yasi

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.