வவுனியாவில் பொதுமகன் மீது பொலிஸார் அடாவடித் தாக்குதல்
கிளிநொச்சியை சேர்ந்த மீனவர் ஒருவர் மீது வவுனியாவில் வைத்து பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜோன் சிவகுமார் என்பவர் பேலியகொட மீன் சந்தைக்கு அனுப்பிய மீனிற்கான பணத்தைப் பெற சென்று, நேற்று இரவு வவுனியாவிற்கு வந்தவேளை L.E.9104 இலக்க வாகனத்தில் வந்த பொலிசாரால் வவுனியா பொது மலசலகூடத்திற்குள் வைத்து மிக மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜோன் சிவகுமார் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.