ஜனாதிபதி மகிந்த வவுனியாவுக்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 21 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு வவுனியாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மஹிந்த ராஜபக்ஸ, வவுனியா அரச செயலகத்தில் நடைபெறவுள்ள வவுனியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளார். இவருடன் சில அமைச்சர்களும் வருகை தரவுள்ளனர்.

இவரின் வருகையையொட்டி பாதுகாப்புப் படையினர் வவுனியாவில் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளனர். இரவு வேளைகளில் ரோந்து செல்லும் படையினர், சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் வீதிகளில் ஆங்காங்கே வீதித் தடைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு சோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

by:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.