காதலை எதிர்த்த அதிபர் மீது மாணவர்கள் தாக்குதல்

வவுனியா பிரதேச பாடசாலை ஒன்றில் காதல் உறவிற்கு எதிர்ப்பை வெளியிட்ட அதிபர் ஒருவர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த பாடசாலையைச் சேர்ந்த ஓர் மாணவியும், மாணவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் பற்றி அறிந்து கொண்ட அதிபர் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற மாணவன் சக நண்பர்களுடன் இணைந்து அதிபரைத் தாக்கியுள்ளார். அதிபரை சுமார் 17 மாணவர்கள் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

By:-yasi



இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.