அதிகளவில் மின்சாரத்தை மோசடியாக பயன்படுத்தும் மாவட்டம் வவுனியா
வடக்கில் போர் இடம்பெற்ற பிரதேசங்களில் மீள்குடியேறும் மக்களுக்கு இலவசமாக மின்சார விநியோகம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதாவது, சொந்தப் பிரதேசங்களில் மீள்குடியேறும் நபர்களுக்கே இலவச மின்சார இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் புதிதாக மின்சார இணைப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் 4000 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் நாட்டில் அதிகளவில் மின்சாரத்தை மோசடியாக பயன்படுத்தும் மாவட்டம் வவுனியா எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
By:-yasi