வவுனியாவில் வேறுவேறு இடங்களில் நேற்றிரவு இரண்டு சடலங்கள் மீட்பு


வவுனியாவில் நேற்றிரவு இரு சடலங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ உணவகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் ஒன்றில் இருந்து அதன் சாரதி நேற்று இரவு 9 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிரிபத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த இந்திக்க பெரேரா (வயது 40) என்பரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இதேவேளை நேற்றிரவு கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்றைய தினம் முன்று முறிப்பு பிரதேசத்தில் இரவு 10.30மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் சாஸ்திரிகூழாங்குளத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் ரமேஸ் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தெடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்று முன்தினம் மரக்காரம்பளைப் பிரதேசத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா பொலிசார் சந்தேகத்தின் பேரில் இரு ஆட்டோ சாரதிகளை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.