வவுனியாவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

வவுனியா, சுந்தரபுரம் பொடுங்கன்பிலவு குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. சுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை கணேசன் (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை வீடு வந்து சேராத இவரை உறவினர்கள் தேடிச்சென்றபோது, இவர் குளத்தில் சடலமாக காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுந்தரபுரம் பொடுங்கன்பிலவு குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதை வவுனியா தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி சன்ன அபயரத்ன உறுதிப்படுத்தினார். சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.