வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்ட ஏ-9 வீதி, 3 மணித்தியாலங்களின் பின் திறக்கப்பட்டது!
வடக்கில் சில இடங்களில் பெய்து வருகின்ற கடும் மழையை அடுத்து கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஏ 9 வீதி 3 மணித்தியாலங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியில் பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியிருந்ததை அடுத்து வீதி இன்று பிற்பகல் 1 :00 மணியளவில் தற்காலிகமாக மூடப்பட்டது.
அடை மழையினால் வவுனியா, நொச்சிமுனை ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனையடுத்தே ஏ-9 வீதியின் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் வவுனியா - செட்டிக்குளம் வீதியில் பாவற்குளம் வெள்ளத்தில் மூழ்கியதனால் அந்த வீதியினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏ 9 வீதியில் சாந்தசோலை சந்தியில் இருந்து கொக்குவெளி மற்றும் நொச்சிமோட்டை பாலம் வரையான பகுதிகள் கடும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.