வவுனியாவில் 67 வயதான பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை


வவுனியாவில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் தனியா வசித்து வந்த 67 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கத்தியால் கோரமான முறையில் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கத்திக் குத்துக்கு இலக்காகி காயமடைந்த பெண் வவுனியா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.