போலி நாணய தாள்கள் அச்சிட்டவர் கைது

வவுனியா குரும்பன்காடு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் சந்தேக நபர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்ட வேளை, அவர்களிடம் இருந்த போலி நாணய தாள்கள் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னரே போலி நாணய தாள்கள் அச்சிடும் இடம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன்  குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து போலி ஆயிரம் ரூபா நாணய தாள்கள் 24 கைப்பற்றப்பட்டுள்ளன. 
இதேவேளை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் இதுவரை 12 வீடுகளில் கொள்ளையிட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களிடமிருந்து 135 பவுண் தங்க நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன
மேலும், கொள்ளையிடப்பட்ட 70 பவுண் தங்க நகைகள் சந்தேகநபர்களினால் அடைவு வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டனர்.
By:-yasi
(tW)

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.