முச்சக்கர வண்டியில் கைவிடப்பட்ட பணத்தை வவுனியா பொலிஸில் ஒப்படைத்த சாரதி
வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றில் கை விடப்பட்ட நிலையில் காணப்பட்ட ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பணத்தினை முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் ஊடாக வவுனியா பொலிஸாரிடம் 10 யூலை 2012 ஒப்படைத்துள்ளார்.
10 யூலை 2012 முன் தினம் இரவு வவுனியா பஸ் தரிப்பிடத்தில் இருந்து தனது சேவையை நிறைவு செய்து விட்டு வீட்டிற்குச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி வி. கிருஷ்ணமூர்த்தி தனது வண்டியை துப்புரவு செய்யும் போது இருக்கைக்கு கீழே இருந்து பணப் பொதியொன்றினை கண்டெடுத்துள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி. இரவீந்திரனுக்கு அறிவித்து விட்டு 10 யூலை 2012 காலை அப்பணத்தினை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் ஊடாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ௭ரிக் பெரேராவிடம் கையளித்துள்ளார்.
இப் பணத்தினை ஒப்படைத்ததற்காக முச்சக்கர வண்டி சாரதியையும் அதன் சங்கத்தினையும் பாராட்டிய வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மேற்படி சாரதியின் பொறுப்பு வாய்ந்த செயலை ஏனையோரும் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
By:-yasikanth