புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சூரி உட்பட நால்வர் கைது
வவுனியா மாவட்ட புளொட் அமைப்பின் பொறுப்பாளராக சூரி என்பவர் செயற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியமை என்பன தொடர்பாகவே குறித்த புளொட் உறுப்பினர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளரான சூரி மீது கொள்ளை முதலான பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பொலிஸார் தேடியவேளை, சூரி தலைமறைவாகிவிட்டார். எனினும் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் வைத்து இவரைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது இவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ்.பார்த்தீபன் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தேடிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
bY:-YASI