முன்னாள் போராளிகள் 75பேர் விடுதலை

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் 75பேர் 02/06/2012 வவுனியாவில் வைத்து சமூகமயப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார் தெரிவித்தார்.

புனர்வாழ்வு பெற்றுவந்த முன்னாள் போராளிகளில் 75 பேர் நேற்று சனிக்கிழமை அவர்களின் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டனர்.

வவுனியா மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற 72 ஆண்களும் 3 பெண்களும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஐயாத்துரை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர்களது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க, புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் ஹெட்டியாராச்சி, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ். சதீஸ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.