விடுதலைப் புலிகளின் தகவல்களை கணனியில் சேமித்து வைத்திருந்த நபர் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்பு வைத்திருந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தனக்குச் சொந்தமான கணனியில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான தகவல்கள் சேமித்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபர் வவுனியா பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களையும் விற்பனை செய்து வந்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.