புதிய விமானப் படைத்தளம்! படையினரின் முயற்சிக்குப் பிரதேச மக்கள் எதிர்ப்பு
ஏற்கனவே வவுனியா நகரில் பல ஏக்கர் விஸ்தீரமான நிலப்பரப்பில் விமானப்படை முகாம் ஒன்று இயங்கி வரும் நிலையில் இராணுவத்தினர் மேலும் ஒரு விமானப்படைத்தளத்தை அமைக்கும் முயற்சியானது பலதரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக வவுனியா தெற்கு பிரதேச சபைத் தலைவர் க.சிவலிங்கம் தெரிவிக்கையில்,
வவுனியா தெற்குப் பிரதேசத்திலுள்ள பம்பைமடு எல்லைக்குள் உத்தேச விமானப் படைத்தளம் அமைந்திருப்பதால் தமது அனுமதியை படையினர் கேட்டிருந்தனர். ஆனால் பிரதேச சபை அனுமதியை வழங்கவில்லை.
அந்தப் பகுதியில் பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கும், அருகில் கலாசார மண்டபம் ஒன்றை நிறுவுவதற்கும் பலரது உதவியை நாடி இருந்தோம்.
இந்த நிலையில் படையினரின் இந்த முயற்சி ஆழ்ந்த துயரைத் தந்துள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை அண்மித்த இந்தப்பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரசின் உதவியுடன் காணிகளை வழங்கி பம்பைமடுப் பகுதியை அழகிய நகராக மாற்ற முயற்சி செய்ய எண்ணினேன் என்றார் அவர்.
By:-yasikanth