விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவின் முக்கியஸ்தர் கைது

விடுதலைப் புலிகளின் ஆயுதக் குழு மற்றும் புலனாய்வு பிரிவின் முன்னாள் மேஜர் ஒருவர் வவுனியா பொலிஸாரின் ரோந்து பிரிவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜீவன் என அழைக்கப்படும் 28 வயதான சுப்பையா கிருஷ்ணகுமார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் சந்தேகத்திற்கு இடமான நடந்து கொண்ட இந்த நபரை கைதுசெய்து விசாரணை நடத்திய போது, அவர் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தான் விடுதலைப் புலிகளின் ஆயுதக் குழுவில் இருந்த போது, மூன்று இராணுவத்தினரையும் மூன்று பொலிஸாரையும் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் தனது உத்தரவின் பேரில், நந்திக்கடல் பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைக்கப்பட்டதாகவும் அவர் விசாரணையின் போது குறிப்பிட்டதாக, வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.