ஓமந்தையில் அடாவடி!- தனியார் பஸ் நடத்துனர் சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்!
ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து தனியார் பஸ் நடத்துனர் ஒருவரும், சாரதி ஒருவரும் இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான இருவரையும் ஓமந்தை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
முதலில் தனியார் பஸ் நடத்துனரைத் தாக்கிய காலில்லாத இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை இந்த சாரதி, நடத்துனர் ஆகிய இருவரும் தாக்கியதாக ஓமந்தை பொலிசாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கவீனரான சிப்பாய் தனக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, வவுனியா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உண்மையாகவே காயமடைந்த தனியார் பஸ் நடத்துனரும், சாரதியும் ஓமந்தை பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
By:-yasikanth