முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட மக்களை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒருதடவையேனும் பார்வையிட்டாரா?- அமைச்சர் குணரட்ன கேள்வி

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்து, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு தடவையேனும் சென்று பார்வையிடவில்லையென மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரகோன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவத் தேவைகளுக்காக எந்த உதவிகளைச் செய்துள்ளார்? ஒரு டிஸ்பிரின் மருந்து வில்லையாவது வழங்கியிருப்பாரா? என அமைச்சர கேள்வி எழுப்பியுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து மக்களுக்கான உதவிகளை பாதுகாப்பு படையினரே வழங்கினார்கள் என அமைச்சர் வீரகோன் தெரிவித்துள்ளார்.

07.02.2012 இடம்பெற்ற இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைக் கலந்துகொள்ளுமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தும் கலந்துகொள்ளவில்லை என மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரகோன் தெரிவித்தார்.

கடந்த மூன்று வருடங்களாக இடம்பெயர்ந்து வவுனியா மெனிக் பாம் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களை புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பிரதேசத்தில் மீள்குடியேற்றும் நிகழ்வு நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

By:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.