தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் மின்சாரம் தாக்கி வவுனியா இளைஞன் பலி!
அநுராதபுரத்தில் இடம்பெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி வளாகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்காட்சியைப் பார்வையிட வருகை தந்திருந்த, வவுனியாவைச் சேர்ந்த 26 வயதையுடைய இளைஞரே, 07.02.2012 இரவு 8 மணியளவில் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கண்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த குறித்த இளைஞர் மீது மின் கடத்தியொன்று விழுந்து இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
10ம் திகதியுடன் நிறைவடையவிருந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சி, எதிர்வரும் 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
By:-yasi