சமகால அரசியல் நிகழ்வுகள் மற்றும் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்
இலங்கை அரசிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையின் சமகால அரசியல் நிகழ்வுகள் மற்றும் கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆராய்வதற்காக 18ஆம் திகதி பிற்பகல் 3மணிக்கு வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளின் கௌரவத்திற்குரிய தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை.சோ.சேனாதிராஜா, சுரேஸ் க. பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வீ.ஆனந்தனசங்கரி, த.சித்தார்த்தன் ஆகியோரும் வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும், உபதவிசாளர்களும், உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும், புத்திஜீவிகளும் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
By:-yasi