ஹட்டன் நஷனல் வங்கியின் யௌவனம் அபிமானம்

எமது தேசத்தின் எதிர்காலம் உங்களை போன்ற இளைஞர்கள் வசமே தங்கியுள்ளது. நீங்கள் எமது பொருளாதாரத்தையும் நம்பிக்கையையும் எதிர்காலத்தில் கொண்டு செல்லப்போகின்றீர்கள். அதன் காரணமாகவே உங்களை தையரியப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ள ஹட்டன் நஷனல் வங்கி உங்களுக்காகவே யௌவனம் அபிமானம் கணக்கினை அறிமுகஞ் செய்துள்ளது.
வாழ்க்கையில் சிறந்த எதிர்காலம் ஒன்றினை அமைத்திட காத்திருக்கும் 18-30 வயதிற்கு இடைப்பட்ட உங்களுக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுத்;தர யௌவனம் அபிமானம் வேலைத்திட்டங்கள் உறுதுணை செய்யும். தேவையான வசதிகளையும் வளங்களையும் வழங்கி தொழில் சந்தையினை விருத்தி செய்து உங்களுக்கு தேவையான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதே யௌவனம் அபிமானம் கணக்கின் நோக்கமாகும்.

ஒவ்வொருவர் உள்ளத்தில் அவரவர் சமூகத்தில் சிறந்த பிரஜையாகவும் மற்றவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் திகழவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்ற வழிசெய்வது உங்களுக்கும் தேசத்திற்கும் சிறந்த நற்பயனை தரும். அதனாலே உங்களுக்கு தேவையான திறன்விருத்தியை மேற்கொண்டு உங்கள் எதிர்காலத்தை பிரகாசப்படுத்தும் வகையில் யௌவனம் அபிமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கனவுகளை நிறைவேற்றும் வகையில் இலங்கையிலுள்ள முன்னணி கூட்டுறவு பங்காளிகளுடன் இணைந்து அதற்கு தேவையான வளங்களையும் வழிகாட்டல்களையும் நாம் கொண்டுள்ளோம். எமது நோக்கம் உங்களை தேசத்திற்கு விலைமதிப்பு மிக்க சொத்தாக மாற்றுவதே ஆகும். அதற்கமைய தற்போது Hayleys, Dialog, CIC, DIMO, Holcim, British Council, the University of Colombo and the World University Society Canada போன்ற நிறுவனங்களும் இணைந்து கொண்டுள்ளன. கொழும்பு பல்கலைக்கழகம், கனடாவின் உலக பல்கலைக்கழக சங்கம் போன்றவற்றுடன் இணைந்து உங்களுக்கு தேவையான பயிற்சிகளையும் வாய்ப்புகளையும் வழங்கி உங்கள் ஆற்றலை வெளிப்படுத்த தேவையான சூழலை உருவாக்கி உள்ளோம். 

யௌவனம் அபிமானம் ஊடாக கிட்டும் அனுகூலங்களும் சலுகைகளும் பலதரப்பட்டவை மற்றும் ஏராளமாவையும் கூட. சேமிப்பு கடன் வசதிகள் (கல்வி வாகனம் தனிப்பட்டதேவை வீடமைப்பு தொழில் முயற்சி கடன்கள்) போன்ற பல வசதிகள்; உங்கள் தேவைகளுக்கும் நிபுணத்துவ ஆற்றலுக்கும் ஏற்ப தயாராகவுள்ளன.
உங்கள் ஆற்றல்களை திறம்பட வளர்த்துக் கொண்டு மிகவும் வெற்றிகரமான ஊழியராக திகழுங்கள்.
நாட்டின் முன்னணி கூட்டுறவு நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள்
வெற்றிகரமான தொழில் வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
தொழில் முயற்சி பற்றிய யோசனை இருப்பின் அதற்கான சந்தையை உருவாக்கிக் கொள்ளுங்கள்
கருத்துப் பரிமாறல் மூலம் உண்மையான சந்தை நிலவரங்களை அறிந்து கொள்ளுங்கள்
நிதிசார் பயிற்சிகள் ஊடாக உங்கள் நிதி பரிபாலனையை கட்டமைப்பு செய்து கொள்ளுங்கள்
தனிப்பட்ட திறன் விருத்தி பயிற்சியின் ஊடாக உங்கள் தனிப்பட்ட திறனையும் உங்கள் சமூக தொடர்புகளையும் நிபுணத்துவமிக்கதாக்கிக் கொள்ளுங்கள்.
உங்களின் எதிர்கால தொழில் வாய்ப்புகளை ஆங்கில மொழி அறிவின் ஊடாக மேலும் பலப்படுத்திக் கொள்ளுங்கள்.

17 பெப்ரவரி 2012
வவுனியா
18 பெப்ரவரி 2012
கிளிநொச்சி
14 மார்ச் 2012
மொனறாகலை
23 மார்ச் 2012
கம்பஹா
By:-yasi

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.