ஜப்பான் நாட்டு ஜெய்க்கா நிறுவன உதவியுடன் கிளி.முல்லை மாவட்டங்களுக்கு நிலையான மின்சாரம்
வவுனியாவிலிருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நிலையான மின்சாரத்தை வழங்குவதற்கென ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவியுடன், கிளிநொச்சியில் பாரிய மின்மாற்றியொன்று நிறுவுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு மின்மாற்றிகளை, ஜெய்க்கா நிறுவனம், இதற்கென வழங்கியிருக்கின்றது. இதன் மூலம் வவுனியாவிலிருந்து வரும் 132 கே.வி அளவு மின்சாரத்தை, 33 கே.வி அளவிற்கு மாற்றி வழங்கும்.
இதன் மூலம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிற்கு நிலையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், சிறியளவில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான 3 நிலை மின்சாரத்தையும் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் மக்கள் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இதேபோல் இத்திட்டம் எதிர்வரும் யூலை மாதம் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
BY:-yasi