வவுனியா குருமண்காட்டில் பஸ்நிறுத்தமொன்றில் கைவிடப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை பொலிசாரால் மீட்பு
நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பிரதேசவாசியொருவர் கொடுத்த தகவலின் பேரில் பச்சிளம் குழந்தையைக் கண்டெடுத்த பொலிசார், வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட குழந்தை பெண்குழந்தையொன்று என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைக்கு இரண்டு வாரங்கள் அளவில் வயதிருக்கலாம் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் தாய்ப்பால் குடித்திருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பச்சிளம் குழந்தையொன்றை தூக்கிக் கொண்டு பெண்ணொருவர் பஸ் நிறுத்தத்தை அண்டிய பிரதேசத்தில் சுற்றித் திரிந்ததை பிரதேசவாசிகள் கண்டுள்ளனர். அதன் பின் சிறிது நேரம் கழிந்த போது குழந்தை மட்டும் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.