ஆட்டோ சாரதி வெட்டி கொலை (கூமாங்குளத்தில் சம்பவம்)

வவுனியா கூமாங்குளத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் இனம் தெரியாதவர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புதன் கிழமை இரவு 9 மணியளவில் கூமாங்குளம் அம்மன் கோவிலடியில் இடம்பெற்றுள்ளது. கோவிலடியில் வந்து நின்ற ஆட்டோ ஒன்றில் இருந்து இரண்டு பேர் ஓடியதாகவும் தொடர்ந்து அவ்விடத்தில் காயங்களுடன் கிடந்த ஆட்டோசாரதியை பொதுமக்கள் சிலர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கபடுகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வவுனியா மாவட்ட நீதவான் , வவுனியா சட்ட வைத்திய அதிகாரி சகிதம் சென்று பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியுள்ளார். சம்பவ இடத்தில் இறந்தவரின் ஆட்டோ சேதமடைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாரதி வெட்டப்பட்ட நிலையில் வாகன விபத்து ஒன்றும் இடம் பெற்றிருக்கலாம் என் சந்தேகிக்கபடூகின்றது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆர்.விக்ரம் (30) என் அடையாளம் காணப்ப்ட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் விசாரணைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.