புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 550 பேர் இன்று விடுதலை வவுனியாவில்

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட 550 போ் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வொன்றின் போது பிரஸ்தாப விடுதலைப் புலி உறுப்பினர்கள் 550 பேரும் சமூகமயப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் திசாநாயக்க அறிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை விடுவிக்கும் இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனருத்தாரண அமைச்சர் சந்திரசிறி கஜதீர கலந்து கொள்ளவுள்ளார்.

இன்று விடுவிக்கப்படவுள்ளவர்களை விடுவித்த பின் இன்னும் 2800 பேரே விடுவிக்கப்படவுள்ளதாகவும், அவா்களில் ஒரு தொகுதியினர் இம்மாதக் கடைசியில் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் திசாநாயக்க மேலும் தெரிவிக்கின்றார்.

அத்துடன் ஏற்கெனவே உறுதியளித்ததன் பிரகாரம் எஞ்சியுள்ள தடுப்புக் காவல் கைதிகள் அனைவரும் இவ்வருட இறுதிக்குள் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

image.png





இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.