வவுனியா தெற்கு வலய அதிகாரிகளுடன் உலக வங்கிப் பிரதிநிதிகள் சந்திப்பு
உலக வங்கியின் நிதியுதவியுடன் வவுனியா தெற்குக் கல்வி வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்குடன் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் வவுனியா தெற்கு கல்வி வலய அதிகாரிகளுக்கும் இடையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடங்களில் வவுனியா தெற்குக் கல்வி வலயத்திற்கு உலக வங்கியினால் வழங்கப்பட்ட நிதியானது எவ்வாறான தாக்கத்தை கடந்த ஆண்டுகளில் கல்வி அபிவிருத்தியில் செலுத்தியுள்ளது என்பது தொடர்பில் வலயப் பணிமனையினால் புள்ளி விபரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டதுடன் தற்சமயம் வலயம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இடப்பெயர்வு வவுனியாவில் எவ்வாறு தாக்கம் செலுத்தியது என்பதனையும் தற்போதைய மீள்குடியேற்ற நடவடிக்கைகளை அடுத்து கல்வியிலான வளர்ச்சியை எவ்வாறு முன்னேற்றகரமானதாக மாற்றுவது என்பது தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆசிரியர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆங்கிலக் கல்வியின் வீழ்ச்சி தொடர்பிலும் ஆங்கில மொழி மூலமான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் தெளிவான விளக்கம் வழங்கப்பட்டிருந்தது. இதன்பின்னர் கோமரசன்குளம் மற்றும் பூவரசன்குளம் பாடசாலைகளுக்கும் உலகவங்கி குழு விஜயம் செய்து பார்வையிட்டது.
இச்சந்திப்பில் உலக வங்கிப் பிரதிநிதிகளும் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி அன்டன் சோமராஜா, உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி நா.மாணிக்கவாசகம் உட்பட கல்வித் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

by:- (yasi)