சிவசக்தி ஆனந்தனின் வாகனம் மோதி வவுனியா நகரசபை வேட்பாளர் ஒருவர் பலி
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் பயன்பாட்டில் நின்ற வாகனம் ஒன்று, அவரது அலுவலகத்தில் பின்பக்கமாக செலுத்திய போது, முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை வேட்பாளரான உதயன் என அழைக்கப்படும் பி.பரஞ்சோதி பலியாகியுள்ளார்.
இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த பி.பரஞ்சோதி, அங்குள்ளவர்களுடன் உரையாடிக்கொண்டு நின்ற வேளை, வாகனம் பின்பக்கமாக சாரதியொருவரால் செலுத்தப்பட்ட போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பி.பரஞ்சோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
By:-yasikanth