இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை தருவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது: வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்
இந்தியாவின் தமிழகத்திலிருந்து தமிழ் ஆசிரியர்களை நாட்டுக்கு அழைத்து பாடசாலைகளில் அவர்களை கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நாட்டில் பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து பட்டதாரிகளை அழைத்து வேலைவாய்ப்பு அளிக்கும் அரசாங்கத்தின் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியது என அந்த சங்கத்தின் அழைப்பாளர் தம்மிக்க முணசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து பட்டதாரிகளை தருவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியாவுடன் நடத்தப்பட்ட இரகசிய பேச்சுவார்த்தையின் பலனாக சுமார் மூவாயிரம் இந்திய ஆசிரியர்களை இலங்கைப் பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா போன்ற மாவட்டங்களில் சுமார் 7000 தமிழ் பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் இவ்வாறான ஓர் பின்னணயில், அரசாங்கம் இந்திய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க எடுக்கும் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியது.
குறிப்பாக அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் தமிழ் பட்டதாரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை.
போலி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் அரசாங்கம் வெளிநாடுகளிடம் மண்டியிட்டு வருகின்றது என தம்மிக்க முணசிங்க தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
By:-yasikanth