தனியார் கல்வி நிலையம் சென்ற பாடசாலை மாணவியைக் காணவில்லை: வடமராட்சியில் சம்பவம்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வடமராட்சியில் வசிக்கும் பாடசாலை மாணவியொருவர் நேற்றுக்காலை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது.
பொன்னுத்துரை யாழினி (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த வருடம் முல்லைத்தீவு பாண்டியன் குளம் பாடசாலையில் கல்வி கற்று க.பொ.த சாதாரண தர ப்பரீட்சைக்கும் தோற்றியிருந்தார்.
பரீட்சை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மேலதிக கல்விக்காக கரவெட்டி யாக்கரு பகுதியில் வந்து தங்கியிருந்து, தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார்.
இந்நிலையில், வழமை போல நேற்றைய தினம் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற குறித்த மாணவி, வீடு திரும்பவில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது குடும்பத்தில் சகோதரர் ஒருவர் வன்னி யுத்தத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றும் இருவர் அங்கவீனராயுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.