முப்பரிமாணத்தில் வெளிவரும் டைட்டானிக்!

அயர்லாந்தில் கட்டுமானப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு 1912ம் ஆண்டு முதல் பயணிகள் போக்குவரத்தில் இணைக்கப்பட்ட ஒரு ஆடம்பரக் கப்பலே டைட்டானிக் ஆகும். இதுவே உலகின் மிகப்பெரிய நீராவிக் கப்பலாகவும் கருதப்படுகின்றது.

இக்கப்பலானது சேவையில் இணைக்கப்பட்ட அதே ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 1503 பயணிகள் பலியாகியிருந்தனர்.

இப்பயங்ர சம்பவத்தை சுவாரஸ்யமான சம்பவங்களுடன் எடுத்துச்சொல்லும் படமாகவே டைட்டானிக் படம் உருவானது. தற்போது அப்படமானது நவீன தொழில்நுட்பங்களுடன் முப்பரிமாணத்தில் மிகப்பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது.
இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.