இரண்டு சிறுமிகள் மீது துஸ்பிரயோகம்! 59 வயது முதியவர் கைது!- வவுனியாவில் சம்பவம்

வவுனியா செட்டிக்குளம் கண்ணாடி பாடசாலை பிரதேசத்தில் 9 வயது மற்றும் 10 வயதையுடைய சிறுமிகள் இருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 6ம் திகதி குறித்த இரு சிறுமிகள் மீது இந்த துஸ்பிரயோகச் சம்பவம் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமிகளின் உறவினர்கள் நேற்று செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, 59 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இன்று வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

By:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.