மெனிக்பாம் மக்கள் விரைவில் மீள்குடியேற நடவடிக்கை

வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி மக்கள் இம்மாதம் 22ஆம் 24ஆம் 27ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் தெரிவித்துள்ளார். 

இதன்படி முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் 22 ஆம் திகதி 346 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 106 பேரும் தேவிபுரம் பகுதியில 306 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 98 பேரும், கரைதுறைப்பற்று, செம்மலை கிழக்கு பகுதியில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 91பேரும் எதிர்வரும் 24 ஆம் திகதியும் வள்ளபுரம் பகுதியில் எதிர்வரும் 27ஆம் திகதி 307 குடும்பங்களைச்சேர்ந்த 894பேரும் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். 

மேலும் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், தற்காலிக குடியிருப்புக்களை அமைப்பதற்கான கூரைகள் மற்றும் 20ஆயிரம் ரூபா பணம் ஆகியன வழங்கப்படவுள்ளன.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.