நகரசபையை மீண்டும் இயங்க செய்ய நடவடிக்கை எடுங்கள்.
வவுனியா வரியிறுப்பாளர்கள் கோரிக்கை.
கடந்த பல மாதங்களாக உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக செயற்படாத நிலையில் காணப்படும் வவுனியா நகர சபையை இயங்க செய்து மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பாக செயற்படுத்த நடவடிக்கை எடுங்கள் என வவுனியா நகரசபைக்குட்பட்ட வரியிறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா நகரசபைக்கு தலைவர் ஒருவரை நியமிப்பதில் பெரும் இழுபறிநிலை காணப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் ஒருமித்த கருத்துக்கள் காணப்படாத நிலையில் யாரை தலைவராக தெரிவு செய்வது என்பதில் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பில் தமிழரசுக்கட்சியினர் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தாம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை வரியிறுப்பாளர்களை ஒன்று திரட்டி செய்யவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.