வவுனியாவில் இளம்பெண் வெள்ளைவானில் கடத்தல்

திருகோணமலையில் வைத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கொழும்பில் தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வளிப்பதற்காக வவுனியா தடுப்புமுகாமில் தடுத்து வைத்திருந்த இந்து மதகுரு ஒருவருக்கு உணவு எடுத்துச் சென்ற அவரது மனைவி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.



திருகோணமலையில் வைத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரஸ்தாப மதகுரு கொழும்பில் தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வளிப்பதற்காக வவுனியாவுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு அவரது மனைவி உணவு எடுத்துச்சென்றதாகவும் அதன்போது வாகனத்தில் வந்த சிலர் அவரை வானில் ஏற்றிச் சென்றதாகவும் அவர் தற்போது வவுனியா இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.