வவுனியாவில் கடும் மழை

வவுனியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மூன்று குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. பாவற்குளம், செட்டிகுளம், இறம்பைக்குளம் ஆகியவையே உடைப்பெடுத்துள்ளன. இதனால் இப்பகுதி வீதிகள் நீரில் மூழ்கின.
தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக வவுனியா நகரில் போக்குவரத்துகள், அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. திருநாவற்குளம் பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளது.வவுனியா பாவற்குளம் உடைப்பெடுத்ததால், வவுனியா செட்டிகுளம் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன், இறம்பைக்குளம் உடைப்பெடுத்துள்ளதால் வவுனியா பூந்தோட்டம் போக்குவரத்துக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. பல வீதிகள் வெள்ளத்தினால் மூழ்கிவிட்டன. இதனால் அன்றாட கருமங்கள் தடைப்பட்டுள்ளன.
இன்று காலை 11 மணியளவில் பாடசாலைகள் மூடப்பட்டன என தெரிவிக்ககப்படுகின்றன.
மேலும் கூமாங்குளம் , தோணிக்கல், பண்டாரிகுளம், உக்குளாங்குளம் மற்றும் தவசிகுளம் ஆகிய கிராமப்புறங்களில் வீதிகள் முற்றாக வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளது.




இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.