Pages

Pages

வவுனியா இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் தற்கொலை

வவுனியா இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் கைக்குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.                                                                                                                                               மாத்தளை கொஹம்பாவில் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 21 ஓகஸ்ட் 2012 மாலை 4.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான படைச் சிப்பாய் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக மாத்தளை – கண்டி ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ரயில் பாதையிலேயே இவ்வாறு கைக்குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

By:-yasi