Pages

Pages

வேப்பங்குளம் கிணறொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள நகரசபைக்கு சொந்தமான திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தில் உள்ள கிணற்றிலிருந்து ஆணிண் சடலமொன்றினை வவுனியா பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி எரிக்பெரேரா மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சடலத்தினை பார்வையிட்டதுடன் மாவட்ட நீதிவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை என்றும் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிஸார் குறிப்பிட்டனர்.

By:-yasi